×

சுதந்திர தினமான வருகிற வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னை: சுதந்திர தினமான வருகிற வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; வியாழக்கிழமை அன்று சுதந்திர தினத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள்.

அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 15.08.2024 (வியாழக்கிழமை) சுதந்திர தினம் அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

The post சுதந்திர தினமான வருகிற வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai district governor ,Tasmak ,Independence Day ,Chennai ,
× RELATED டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில்...