×

ரவுடி அசோக்குமார் வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி: போலீஸ் விசாரணை

கடலூர்: ரவுடி அசோக்குமார் வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி வந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அசோக்குமார் வங்கிக் கணக்குக்கு அதிக பணம் வந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என ஒரே மாதத்தில் ரூ.2.5 கோடி பணம் அசோக்குமார் வங்கிக் கணக்குக்கு வந்ததால் சந்தேகம் அடைந்த கனரா வங்கி நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்த நிலையில் ரவுடி அசோக்குமாரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ரவுடி அசோக்குமார் மீது கொலை, அடிதடி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அசோக் குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிய 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரவுடி அசோக்குமார் வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rawudi Asokumar ,Cuddalore ,Asokumar ,Dinakaran ,
× RELATED குப்பை கிடங்கில் தீ விபத்து