×

செம்பருத்திப்பூ பருப்பு அடை

தேவையானவை:

சிவப்பு செம்பருத்திப்பூ – 20,
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிபருப்பு – தலா 50 கிராம்,
பச்சரிசி – 200 கிராம்,
தேங்காய் துருவல் – ½ கப்,
காய்ந்த மிளகாய் – 10,
இஞ்சி – சிறு துண்டு,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 100 கிராம்.

செய்முறை:

செம்பருத்தி பூவை நன்கு அலம்பி வைத்துக் ெகாள்ளவும். அரிசி, பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊறவைத்து, அத்துடன் தேங்காய் துருவல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு, செம்பருத்திப்பூ சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு அரைத்த மாவில் ஒரு கரண்டிவிட்டு மெல்லிய அடையாக வார்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சுவையான செம்பருத்திப்பூ பருப்பு அடை ரெடி. இதில் பசை தன்மை அதிகம் உள்ளதால் மூட்டுகளுக்கும், இதயத்துக்கும் நல்லது.

The post செம்பருத்திப்பூ பருப்பு அடை appeared first on Dinakaran.

Tags :
× RELATED காலிஃபிளவர் புலாவ்