வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை ஒட்டி செகந்திராபாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செகந்திராபாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆக.27, 28, 29, செப்.4, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். செகந்திராபாத்தில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்படும் ரயில் (07125) மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். வேளாங்கண்ணியில் இருந்து செகந்திராபாத்துக்கு ஆக.28, 30, செப்.5, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.45க்கு புறப்படும் ரயில் (07126) செகந்திரபாத்துக்கு மறுநாள் 3 மணிக்கு வந்தடையும்.
The post செகந்திராபாத் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!! appeared first on Dinakaran.