டெல்லி: ஹிண்டன்பெர்க் அறிக்கை எதிரொலியாக, செபி தலைவர் பதவி விலகக்கோரி ஆக.22ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. மாநில தலைநகரங்களில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
அதானி குழுமம் மீது கடந்த ஆண்டு பங்குச்சந்தை முறைகேடு புகார் தெரிவித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், தற்போது ‘செபி’ தலைவர் மாதபி புச் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. அதானி குழும நிதி முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களில் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக கூறியிருக்கிறது.
இந்த விவகாரம் இந்திய அரசியல் வட்டாரத்தில் மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த புகார்கள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த ஒன்றிய அரசை காங்கிரஸ் கட்சி மீண்டும் வலிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், செபி தலைவரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி வரும் ஆக.22ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மாநில தலைநகரங்களில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
The post செபி தலைவர் பதவி விலகக்கோரி ஆக.22ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்! appeared first on Dinakaran.