×

ஆகஸ்ட் 22-ம் தேதி காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம்..!!

டெல்லி: செபி தலைவர் மாதவி ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 22-ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதானி குழும முறைகேட்டில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகள் வைத்துள்ளதாக செபி தலைவர் மாதவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செபி தலைவர் மாதவி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

The post ஆகஸ்ட் 22-ம் தேதி காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Nationwide Struggle ,Delhi ,Congress ,Sebi ,Madhavi ,Karke ,Rakulganti ,Adani Group ,Dinakaran ,
× RELATED மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தனர்