×

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் கருத்துரு இல்லை: தமிழக போக்குவரத்துத் துறை

சென்னை: மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறை மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்தான பாமக தலைவர் அன்புமணி புகாருக்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் கருத்துரு இல்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் நாளிதழில் செய்தி வெளியாவதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு போக்குவரத்துத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் கருத்துரு இல்லை எனவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது எனவும் போக்குவரத்துத் துறை உறுதி அளித்துள்ளது.

 

The post பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் கருத்துரு இல்லை: தமிழக போக்குவரத்துத் துறை appeared first on Dinakaran.

Tags : Govt ,Tamil Nadu Transport Department ,CHENNAI ,Tamil Nadu ,BAMA ,president ,Anbumani ,Dinakaran ,
× RELATED சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு