×

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகள் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து போராட்டம் நடத்தியதாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விஏஓ அளித்த புகாரின் பேரில் பதிந்த வழக்கில் சரியான பிரிவுகள் சேர்க்கவில்லை என உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டதை நிரூபிக்கவில்லை என்றும், ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது, எஃப்ஐஆரில் குறைபாடுகள் உள்ளன என்றும் கூறி வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது.

The post முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகள் ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Former Minister ,C. V. ,Sanmuhat ,iCourt ,Chennai ,CHENNAI HIGH COURT ,SANMUGAT ,former ,minister ,Jayakumar ,WAO ,Dinakaran ,
× RELATED மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுகள்...