- ஆளுநரின் தேயிலைக் கட்சி
- சுதந்திர தினம்
- திம கூட்டணி கட்சிகள்
- சென்னை
- கவர்னர்
- R.N.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- ரவி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆர். என். முதராசன்
- பாரதிய ஜனதா கட்சி
- தின மலர்
சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்போல் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். மேலும், மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் முட்டுக்கட்டை போடுகிறார் ஆளுநர் என அவர் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
The post சுதந்திர தினத்தையொட்டி ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.