×

யானைக் கூட்டத்துடன் சேர்ந்ததா குட்டி யானை? வனத்துறை கண்காணிப்பு

நீலகிரி: மசினகுடி அருகே மாயார் பகுதியில் குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று காலை முதல் தாயை பிரிந்த நிலையில் குட்டியானை சுற்றித்திரிவதை வனத்துறை கண்டுபிடித்தது. மசினகுடி வனப்பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் குட்டியை வனத்துறையினர் சேர்த்தனர். குட்டி யானையை விட்ட பகுதியில் 3 யானை கூட்டங்கள் உள்ளதால் வனத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தாயை பிரிந்த குட்டியானை 3 கூட்டங்களில் இருக்க வாய்ப்பு உள்ளதாக வனத்துறை கருதுகிறது.

The post யானைக் கூட்டத்துடன் சேர்ந்ததா குட்டி யானை? வனத்துறை கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Forest Department Monitoring ,Nilgiris ,Mayar ,Masinagudi ,Masinagudi forest ,Dinakaran ,
× RELATED அல்லி மாயார் பழங்குடியின மக்கள்...