×

முல்லைப்பெரியாறு அணையில் தமிழக உரிமை காக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: முல்லைப்பெரியாறு அணையில் தமிழக உரிமையை காக்க வேண்டும்; அணை நீர்மட்டத்தை 152 அடியாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வயநாடு நிலச்சரிவு, முல்லைப்பெரியாறு அணையை தொடர்புப்படுத்தி கேரளத்தில் பொய்யான பரப்புரை செய்து வருகின்றனர். இயற்கைப் பேரிடர் பாதித்த கேரளத்துக்கு அனைத்து வழிகளிலும் உதவும் நேரத்தில், தமிழ்நாடு உரிமையை விட்டுத்தரக் கூடாது. நிலச்சரிவைக் காட்டி, முல்லைப் பெரியாறு அணைக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்பது அங்குள்ள அரசியல் கட்சிகளின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

The post முல்லைப்பெரியாறு அணையில் தமிழக உரிமை காக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mullaiperiaru dam ,Ramdas ,CHENNAI ,Mullaperiyar dam ,Ramadoss ,Bamaga ,Kerala ,Wayanad ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...