மரக்காணம், ஆக. 13: விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஒட்டிய பகுதியாகும். இதனால் கோடை காலத்தில் கூட அதிகப்படியான வெயிலின் தாக்கம் இருக்காது. ஆனால் இந்தாண்டு வரலாறு காணாத வகையில் இப்பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதன் காரணமாக கோடை மழை பெய்து வெயிலின் தாக்கத்தை தணிக்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கோடை காலத்தில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் கோடை காலத்தை போல் வெயில் சுட்டெரிக்கிறது. ஆனால் இரவு நேரங்களில் கனமழை கொட்டுகிறது. இந்த கனமழையால் இப்பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதுபோல் முக்கிய ஓடைகள், ஆறுகள் போன்றவைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோல் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும் இரவு நேரத்தில் பெய்யும் கனமழையால் அனல் காற்றின் தாக்கம் இல்லை. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
The post மரக்காணம் பகுதியில் கனமழை appeared first on Dinakaran.