×

கோ-கோ போட்டியில் திருச்சி பள்ளி சாதனை

 

திருச்சி. ஆக.13: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கான கோ-கோ போட்டிகள் தேநீர் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் திருச்சி பொன்மலைப்பட்டி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 16 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் ஜூனியர் மற்றும் சீனியர் மாணவர்கள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர், முதல்வர் டென்னிஸ் மேரி, உடற்கல்வி இயக்குனர் ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

The post கோ-கோ போட்டியில் திருச்சி பள்ளி சாதனை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Go-Go Tournament ,Tiruverumpur ,Go ,Tea Patti Government Boys High School.… ,Dinakaran ,
× RELATED தலை துண்டித்து ரவுடி கொடூர கொலை: போதை நண்பர்கள் வெறிச்செயல்