- கதிர்வேடு அரசு பள்ளி
- புழல்
- கதிர்வேடு அரசு தொடக்கப்பள்ளி
- 31
- வார்டு
- கவுன்சிலர்
- சங்கீதா பாபு
- கதிர்வேடு அரசு பள்ளி மேலாண்மை குழு
- தின மலர்
புழல்: புழல் அடுத்த கதிர்வேடு அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமை தாங்கி, கூட்டத்தை தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஹில்டாபால் பார்வையாளராக கலந்து கொண்டார். தொடக்கப்பள்ளி கதிர்வேடு பள்ளியின் தலைமை பொறுப்பு தலைமை ஆசிரியர் புஷ்பராணி வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவராக சுசிலா ஆல்வின் பாபு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 2024-2026 ஆண்டுக்கான பள்ளி கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக 24 பேர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பள்ளி ஆசிரியர் எமிலா நன்றி கூறினார். கூட்டத்தில் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கதிர்வேடு அரசுப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் appeared first on Dinakaran.