×

வருவாய் கோட்ட அளவில் வரும் 16ம் தேதி விவசாயிகள் குறை தீர்கூட்டம்: கலெக்டர் தகவல்

 

திருவள்ளூர்: வருவாய் கோட்ட அளவில் வரும் 16ம் தேதி விவசாயிகள் குறை தீர்கூட்டம் நடக்கவுள்ளதாக கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் வரும் 16ம் தேதி காலை 10 மணியளவில் திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சப் – கலெக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும்.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் துறையைச் சார்ந்த அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து வேண்டும். எனவே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண அந்தந்த வருவாய் கோட்டங்களில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post வருவாய் கோட்ட அளவில் வரும் 16ம் தேதி விவசாயிகள் குறை தீர்கூட்டம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : 16th ,Thiruvallur ,Collector ,T. Prabhu Shankar ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED அனுமதியற்ற கல்வி நிறுவன...