×

வினேஷ் போகத்துக்கு அநீதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை:மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம், செய்து அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் விளையாட்டு துறையின் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் விளையாட்டு துறையின் தலைவர் பெரம்பூர் நிசார் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மோகன காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வினேஷ் போகத்துக்கு அநீதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vinesh Bhogat ,Tamil Nadu Congress ,Chennai ,Sathyamurthi Bhawan, Chennai ,Tamil Nadu Congress Sports Department ,Olympics ,Congress ,Tamil Nadu ,
× RELATED வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தோல்வி;...