×

மழையால் சாய்ந்த புளியமரத்தில் பைக் மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலை மறியல் ஆரணி அருகே மழையால் சாலையில் சாய்ந்த

ஆரணி, ஆக. 13: ஆரணி அருகே மழையால் சாலையில் சாய்ந்த புளியமரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழந்தார். நண்பன் படுகாயமடைந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ஆரணி அடுத்த நெசல் கூட்ரோடு அருகே ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் புளியமரம் வேறுடன் சாலையின் நடுவில் சாய்ந்தது. இதனால், அப்பகுதியில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்த ஆரணி தாலுகா போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சாலை நடுவில் இருந்த மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும், நடுவில் இருந்த மரத்தினை முழுமையாக அகற்றாமல், வாகனங்கள் செல்லும் வகையில் உடனடியாக சாலையில் வழியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆரணி அடுத்த விண்ணமங்கலம் பழைய காலனி பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் சிவா(23), அதேபகுதியை சேரந்த முருகன் மகன் சஞ்சய்குமார்(22), இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பைக் தயாரிப்பு கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். மேலும், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இவரும் பைக்கில் சொந்த ஊரான விண்ணமங்கலத்திற்கு வந்துள்ளனர். பின்னர், நேற்று அதிகாலை மீண்டும் சிவா மற்றும் சஞ்சய்குமார் இருவரும் வேலைக்கு செல்வதற்காக, வீட்டில் இருந்து பைக்கில் ஆரணி வழியாக ஸ்ரீபெரும்பத்தூருக்கு சென்றுள்ளனர். அப்போது, ஆரணி அடுத்த நெசல் கூட்ரோடு அருகே சென்றபோது, மழையினால் சாலையில் விழுந்து கிடந்த மரத்தின் மீது எதிர்பாராத விதமாக அவரது பைக் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.

மேலும், சிவாவிற்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் சிவாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், காயமடைந்த சஞ்சய்குமாரை, அதே மருத்துவமைனக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிவாவின் உறவினர்கள் சாலையில் விழுந்த மரத்தை முழுமையாக அகற்றததால் தான் விபத்து ஏற்பட்டதற்கு, காரணம், அதனால், சாலையில் விழுந்த மரத்தை முழுமையாக அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திடீரென அவரது உறவினர்கள், பொதுமக்கள் ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post மழையால் சாய்ந்த புளியமரத்தில் பைக் மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலை மறியல் ஆரணி அருகே மழையால் சாலையில் சாய்ந்த appeared first on Dinakaran.

Tags : Arani ,Thiruvannamalai district ,Dinakaran ,
× RELATED ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில்...