- கிராமம்
- திருவண்ணாமலை மாவட்டம்
- சுதந்திர தினம்
- திருவண்ணாமலை
- கலெக்டர்
- பாஸ்கரா பாண்டியன்
- 15வது சுதந்திர தினம்
திருவண்ணாமலை, ஆக.13: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி 860 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்களும் இக்கிராமசபை கூட்டங்களில் பங்குபெற்று கூட்டத்தில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து விவாதிக்கலாம்.
கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய கூட்டப்பொருள்கள் விவரம்: கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, குறித்து விவாதித்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ,தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஐல் ஜீவன் இயக்கம்.எனவே, கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பொது மக்களும் சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். இவர் அவர் தெரிவித்துள்ளார்.
The post சுதந்திர தினத்தன்று 860 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.