×

பண்டிகை காலத்தை ஒட்டி நெய் விலையில் ரூ.10 சிறப்பு தள்ளுபடி: ஆவின் அறிவிப்பு

சென்னை: ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகை காலங்களில் பால் உபபொருள்களின் விலைகளில் அவ்வப்போது சிறப்பு தள்ளுபடி செய்வது வழக்கம். அந்த வகையில், ஆக.26ம் தேதி கிருஷ்ணஜெயந்தி மற்றும் செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு 100 மி.லி. நெய் விலையில் ₹10 தள்ளுபடி செய்யப்படுகிறது. அதன்படி, ₹85-க்கு விற்பனையாகும் ஆவின் 100 மி.லி. நெய் விலை ₹75-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி செப்டம்பர் 15ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பண்டிகை காலத்தை ஒட்டி நெய் விலையில் ரூ.10 சிறப்பு தள்ளுபடி: ஆவின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Aa ,CHENNAI ,Aavin ,Aavin Company ,Krishna Jayanti ,
× RELATED ஆவின் பால் பொருட்கள் ரேஷன் கடையில் விற்பனை: அமைச்சர் தகவல்