×

கருங்கல் அருகே லாரி கண்ணாடி உடைத்தவர் சிக்கினார்

கருங்கல், ஆக.13 : கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு லாரிகளை சாலையோரம் நிறுத்தி இருந்தனர். டிரைவர்கள் பின்னர் வந்து பார்த்தபோது லாரிகளின் முன்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, ஒருவர் கம்பு, கல்லால் லாரியை தாக்கியது தெரியவந்தது.இதேபோல் திக்கணங்கோட்டில் இருச்சக்கர வாகனம், காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மத்திக்கோடு அதே நபர் கையில் கம்புடன் வந்தார். அவரை ெபாதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து கருங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

The post கருங்கல் அருகே லாரி கண்ணாடி உடைத்தவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Karungal ,Mathikode ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் வழங்க...