×

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு

ராசிபுரம், ஆக.13: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதியம்பட்டி வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2 கிராமங்களுக்கு இடையேயான தரைப்பாலம் வெள்ளத்தால் மூழ்கியதால், வேலைக்கு செல்வோர், மாணவர்கள், முதியவர்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர். ஆனால் சிலர் ஆபத்தை உணராமல் வெள்ளத்தில் நடந்து சென்றனர். மேலும், திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. கருமையான நிறத்திலும், நுங்கு நுரையுடனும் தண்ணீர் வருவதால், விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, பொதுப்பணித்துறையினர் தரைப்பாலத்தில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைத்து தடுப்புகள் அமைத்துள்ளனர்.

The post திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Varanadumuthar ,Rasipuram ,Vennandur ,Mathiampatti ,
× RELATED காலபைரவருக்கு வெள்ளிக்கவசம்