தர்மபுரி, ஆக.13: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழை அளவின் விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: பாலக்கோடு- 142.2, மாரண்டஅள்ளி- 55, அரூர்- 42.3, பென்னாகரம்- 30, பாப்பிரெட்டிப்பட்டி – 35, தர்மபுரி- 15, ஒகேனக்கல்- 11.4, மொரப்பூர்- 8.5 என பரவலாக மழை பெய்தது.
The post தர்மபுரியில் பரவலாக மழை appeared first on Dinakaran.