×

திருமாவளவன் பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரத்ததானம்

நாகர்கோவில், ஆக. 13: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளையொட்டி குமரி மைய மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு ஒன்றியம் சார்பில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய துணைச்செயலாளர் பிரைட் தலைமை வகித்தார். மைய மாவட்ட செயலாளர் மேசியா முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 8 பேர் ரத்ததானம் செய்தனர். மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித், நிர்வாகிகள் ராணி, துரை, கலைச்செல்வி, ஜெஸ்டின், ஷாஜி, பபிஸ், ஜெரால்ட் அபித், மகேஷ், ஜெனித், ஆனந்த், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருமாவளவன் பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரத்ததானம் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Liberation Tigers ,Nagercoil ,Asaripallam Medical College Hospital ,Kurundankodu Union ,Kumari Central District ,Liberation Tigers Party ,Thol Thirumavalavan ,Union ,Deputy Secretary ,Bright ,Liberation ,Tigers Party ,
× RELATED மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக...