- கேரள வங்கி
- கேரள மாநிலம்
- வயநாடு
- பேங்க் ஆஃப் கேரளா
- வயநாடு மாவட்டம்
- சூரல்மலை
- மேப்பாடி
- முண்டகா
- அட்டமலை
- புஞ்ஜிரிதா
- வயநாடு
- தின மலர்
வயநாடு: வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்தது கேரள வங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு உள்ளிட்ட கிராமங்கள் உருக்குலைந்து போயுள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மண்ணில் புதைந்துவிட்டன. அந்த வீடுகளில் இருந்த ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்ததோடு, பலர் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்ற நிலையில், 11 நாட்களைக் கடந்து மீட்பு பணிகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோர் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் ஆகியோர் கேரளா வங்கியின் சூரல்மாலா கிளையில் பெற்ற கடனை அந்த வங்கி நிர்வாகம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் கேரளா வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை நன்கொடை வழங்கியதுடன், வங்கி ஊழியர்களும் தானாக முன் வந்து 5 நாட்கள் சம்பளத்தை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தானமாக அளித்துள்ளனர்.
The post கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்தது கேரள வங்கி உத்தரவு appeared first on Dinakaran.