நாமக்கல்: நாமக்கல் அருகே சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. திருச்சியில் இருந்து ஓட்டுநர் திவாகர் என்பவர் அவரது நண்பருடன் நாமக்கல்லில் தனியார் கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் சேலம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நாமக்கல் அருகே கருங்கல் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னல் வந்த அரசு பேருந்து காரின் பக்கவாட்டில் மோதி உள்ளது.
இதில், நிலை தடுமாறிய கார் தடுப்பு சுவரை தாண்டி பறந்து சென்று எதிரே சொகுசுக்கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லொறியில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளாகி பறந்து சென்று கண்டெய்னர் லொறியில் மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
The post நாமக்கல் அருகே சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த பேருந்து மோதி விபத்து..!! appeared first on Dinakaran.