Buttermilkதேவையானவை:
அரிசி மாவு – 1 ஸ்பூன்,
மோர் – 1 கப்,
மஞ்சள் பொடி, பெருங்காய பொடி – ஒரு சிட்டிகை,
உப்பு – திட்டமாக.
தாளிக்க:
நெய், ஓமம் – 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை – 5.
செய்முறை:
மோரில் அரிசி மாவு, உப்பைக் கரைத்து மஞ்சள்தூள், பெருங் காயம் சேர்த்து சுமாராகக் கொதிக்க விடவும். நன்கு கொதித்தால் மோர் திரிந்து விடும். எனவே 2 கொதி வந்ததும் இறக்கி வைத்து நெய்யில் ஓமம், கறிவேப்பிலை தாளித்து போடவும். இது சளி பிடித்த நாக்கிற்கு மிகவும் ருசியாக இருக்கும்.
The post மோர் ரசம் appeared first on Dinakaran.