×

பல்லுயிர் காக்கும் நமது அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் யானைகளின் எண்ணிக்கை சீராக உயர்த்து வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது மகிழ்ச்சி என உலக யானைகள் தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் முதலவர் தெரிவித்துள்ளதாவது; “சூழலியற் சமநிலையைப் பேணுவதில் யானைகளின் பங்கு அளப்பரியது. தமிழிலக்கியம் முழுதும் பல்வேறு பெயர்களால் யானைகள் குறிப்பிடப்படுவதில் இருந்தே அவை இம்மண்ணுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவை உணரலாம்.

பல்லுயிர் காக்கும் நமது அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக உயர்ந்து வரும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை உலக யானைகள் தினத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post பல்லுயிர் காக்கும் நமது அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் யானைகளின் எண்ணிக்கை சீராக உயர்த்து வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,World Elephant Day ,DMK ,
× RELATED தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்...