×

கோவில்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி உள்ளார்

*அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

கோவில்பட்டி : தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார் என கோவில்பட்டியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். கோவில்பட்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நகர அவைத்தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது. நகரத் துணைச் செயலாளர்கள் காளியப்பன், அன்பழகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் உலகராணி, நகர பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதிகள் ரவீந்திரன், புஷ்பராஜ், மாரிச்சாமி முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் கருணாநிதி வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் ‘‘கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 2026ல் நடைபெறும் தேர்தலில் இத்தொகுதியில் அமோக வெற்றிபெற்றே தீர வேண்டும் என அனைவரும் உறுதியேற்க வேண்டும். கட்சியின் வேர்களான தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.

பெண்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். எனவே, எதிர்கட்சியினருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்துவந்த தொழிலாளர் நலவாரியம் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முழு வீச்சில் இயங்கி வருகிறது.

தற்போது 31 தொழிலாளர் நலவாரியத்திலும் உறுப்பினர்களாக இருப்பவர்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உதவித் தொகைக்கு 1.50 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.18 கோடி பேருக்கு ஏற்கனவே உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியோரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. அமைச்சர் உதயநிதியின் துறை மூலமாக இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் காப்பீடு திட்டம் நடைமுறையில் உள்ளது. லிங்கம்பட்டி, கடம்பூரில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, 2026ம் ஆண்டு வெற்றி என்ற இலக்கை நோக்கி அனைவரும் பயணிப்போம் ’’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சந்திரசேகர், கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றியச் செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னபாண்டியன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், 22வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்துமேரி, பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராமர், பீட்டர், சிவசுப்பிரமணியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், வக்கீல் அணி குருசெல்லப்பா, மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள்,

வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் சேதுரத்தினம், செண்பகவல்லி அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகராஜா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி, விவசாயத் தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தவமணி, வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பரமசிவம், அயலக அணி மாவட்ட துணைத்தலைவர் கடம்பூர் முருகன், ஆதிதிராவிடர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குருராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை நகரச் செயலாளர் கருணாநிதி செய்திருந்தார்.

The post கோவில்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி உள்ளார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,DMK ,Kovilpatti ,Minister ,Geethajeevan ,Koilpatti ,M.K.Stalin ,president ,Muniyaswamy ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி கேள்விக்கு முதல்வர்...