×

முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும்வரை பூஜா கெட்கரை கைதுசெய்யக்கூடாது: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கர், முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், புனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சிக்காக நியமிக்கப்பட்டிருந்த போது பல சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்த யுபிஎஸ்சி, வரும் காலங்களிலும் அவர் தேர்வெழுத தடை விதித்தது.

இந்த முறைகேடு தொடர்பாக யுபிஎஸ்சி கொடுத்த புகாரின் பேரில் பூஜா மீது டெல்லி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கெட்கர், முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும்வரை பூஜா கெட்கரை கைதுசெய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி காவல்துறை, யுபிஎஸ்சி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆக.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

The post முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும்வரை பூஜா கெட்கரை கைதுசெய்யக்கூடாது: டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Pooja Khedkar ,Delhi High Court ,Delhi ,Pooja Kethkar ,Pooja Khetkar ,Maharashtra ,Pune ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு