×

தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கெட்கர், முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு

டெல்லி: தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கெட்கர், முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பூஜா கெட்கர் பலமுறை ஐ.ஏ.எஸ். தேர்வை எழுத தனது அடையாள சான்றை போலியாக தயாரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும்வரை பூஜா கெட்கரை கைது செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி காவல்துறை, யுபிஎஸ்சி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆக.21-ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கெட்கர், முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Pooja Gedkar ,Delhi High Court ,Munjam ,Delhi ,Mujam ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு