×

புழலில் 200 ஆமைகள் பறிமுதல்

புழல்: புழல் லட்சுமிபுரத்தில் ரவிக்குமார் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 150 நட்சத்திர ஆமைகள், 50 இந்திய ஆமைகள், ஒரு குட்டி மலைப்பாம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட காஜா மொய்தீன் என்பவர் தந்த தகவலை அடுத்து ரவிக்குமார் வீட்டில் சோதனை நடத்தினர். சுங்கத்துறையினரும் காவல்துறையினரும் இணைந்து ரவிக்குமார் வீட்டில் சோதனை நடத்தினர். வனஉயிரினங்களை பறிமுதல் செய்த போலீசார், ரவிக்குமார் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

The post புழலில் 200 ஆமைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ravikumar ,Lakhshmipuram ,Gaja Moeen ,Chennai Airport ,
× RELATED ரிசர்வ் தொகுதிகளையும் ஒழிக்கப் போகிறார்களா?.. ரவிக்குமார் எம்.பி. கேள்வி