×

மெமு ரயில் 3 நாட்கள் பகுதி ரத்து; அரக்கோணம்-வேலூர் கன்டோன்மென்ட்

வேலூர்: அரக்கோணம்-வேலூர் கன்டோன்மென்ட்-அரக்கோணம் மெமு ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வேலூர் கன்டோன்மென்ட்-காட்பாடி இடையே தண்டவாள பராமரிப்புப்பணிகள் நடப்பதால் அரக்கோணத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06765 அரக்கோணம்-வேலூர் கன்டோன்மென்ட் மெமு ரயில் இன்று 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.

மறுமார்க்கத்தில் வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06736 வேலூர் கன்டோன்மென்ட்-அரக்கோணம் மெமு ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டு, காட்பாடியில் இருந்து காலை 10.20 மணிக்கு அரக்கோணம் புறப்பட்டு செல்லும். இத்தகவலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post மெமு ரயில் 3 நாட்கள் பகுதி ரத்து; அரக்கோணம்-வேலூர் கன்டோன்மென்ட் appeared first on Dinakaran.

Tags : MEMU ,Arakkonam- ,Vellore Cantonment ,Vellore ,Southern Railway ,Arakkonam ,Kadbadi… ,Dinakaran ,
× RELATED அரக்கோணம் அருகே கடன் தொல்லையால்...