×

மாவட்ட அளவில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

திருச்சி, ஆக.12: திருச்சி மாவட்ட அளவிலான 20வது ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி திருவானைக்காவல் மத் ஆண்டவன் கல்லூரியில் நேற்று நடந்தது. 5 முதல் 21 வயதிற்கு உட்பட்டோருக்கு போட்டிகள் ஓபன் முறையில் நடைப்பெற்று வருகிறது. திருச்சி மாவட்ட கராத்தே சங்க தலைவர் செழியன் போட்டிகளை தொடங்கி வைத்தார். கட்டா, தனித்திறமை, குமித்தே மற்றும் குழு கட்டா பிரிவில், வீரர், வீராங்கணைகளின் கராத்தே சண்டைகள் மற்றும் கட்டா உள்ளிட்ட தனித்திறன்கள், குமித்தே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள மாநில அளவிலான கிராண்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பில் பங்கேற்பார்கள்.

The post மாவட்ட அளவில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி appeared first on Dinakaran.

Tags : District Level Karate Championship ,Trichy ,20th Open Karate Championship ,District ,Trichy Thiruvanaikaval Math Andavan College ,District Karate… ,Dinakaran ,
× RELATED விதிமீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சிக்கு ஆணை