×

பேரளத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருவாரூர், ஆக. 12: திருவாரூர் அருகே பேரளத்தில் மணல் திருட்டில் ஈடுப்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் பேரளம் சரகத்திற்குட்பட்ட குமாரக்குடி என்ற பகுதியில் மணல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த குவாரியில் இரவு நேரங்களில் அனுமதிகளை மீறி மணல் ஏற்றி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுப்பட்டனர்.

அப்போது இரவு நேரத்தில் விதிமுறைகளை மீறி மணல் எடுத்து வந்த நன்னிலம் அருகே உபயவேதாந் தபுரத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் சிவா (23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 2 டிராக்டர்களையும் கைப்பற்றினர்.

மேலும் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடு ப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

The post பேரளத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvarur, Aga ,Bharal ,Thiruvarur ,Kumarakudi ,Beralam Saragah ,Thiruvarur district ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு நிவாரணம் தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை