×

தேசிய கொடி விற்பனை மும்முரம்

திருவாரூர், ஆக. 12: நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூரில் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவானது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாவட்ட கலெக்ட ர்கள் மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில் நடப்பாண்டின் சுதந்திர தினத்தையொட்டி திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு அலுவலக மைதானத்தில் இந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சி வரும் 15ம் தேதி நடைபெறுகிறது.

இதில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணிகளும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மூலம் நடைபெற்றது. இந்நிலையில் திருவாரூரில் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.அதன்படி துணியினாலான தேசிய கொடி, காதிகத்தால் ஆன தேசிய கொடி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வானகங்களில் பொருத்தும் கொடி என பல்வேறு வகையான கொடிகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

The post தேசிய கொடி விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Independence Day ,Republic Day ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்