- சேலம்
- தமிழ்நாடு எடை தூக்கும் சங்கம்
- -நிலை பனியிடிப்பு சாம்பியன்ஷி
- வேலூர் மாவட்டம்
- சேலம் மாவட்ட எடை தூக்கும் சங்கம்
- தின மலர்
சேலம், ஆக.12: தமிழ்நாடு பளுதூக்கும் சங்கம் சார்பில், 18வது மாநில அளவிலான பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியானது வேலூர் மாவட்டம்ரில் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்கத்தை சார்ந்த வீரர்களும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வௌிப்படுத்தினர்.
இதில் மாணவி பவதாரணி 49 கிலோ எடைப்பிரிவில் ஒட்டுமொத்தமாக 111 கிலோ எடையை தூக்கி மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார். அதேபோல், மாணவி தீபனா 55 கிலோ எடைப்பிரிவில், இளையோர் மற்றும் ஜூனியர் பிரிவில் ஒட்டுமொத்தமாக 110 கிலோ எடையை தூக்கி இரண்டு பதங்கங்களுடன் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை, சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்க செயலாளர் சண்முகம் உள்பட பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
The post பளுதூக்கும் போட்டியில் சேலம் மாணவிக்கு பதக்கம் appeared first on Dinakaran.