×

குன்னம் பகுதியில் பருவமழை முன்னேற்பாடு பணிகள் மும்முரம்

குன்னம், ஆக.12: குன்னம் பகுதியில் பருவமழை துவங்க உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பெரம்பலூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட கட்டுப்பாட்டிலுள்ள குன்னம் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள் மற்றும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் என மொத்தம் 296.070 கி.மீ நீள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எதிர் நோக்கியுள்ள பருவமழை முன்னேற்பாடாக குறுபாலங்கள், சிறுபாலங்கள் மற்றும் பெரிய பாலங்கள் என மொத்தம் 648 பாலங்களுக்கான முட்செடி அகற்றுதல், நீர் செல்லும் பாதையின் அடைப்பினை நீக்குதல் போன்ற பணிகளை நெடுஞ்சாலைதுறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புருவங்களை சரிசெய்தல், பாலங்களுக்கு வர்ணம் பூசுதல், பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post குன்னம் பகுதியில் பருவமழை முன்னேற்பாடு பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Gunnam ,Gunnam (N ,Perambalur ,Dinakaran ,
× RELATED பெரிய வெண்மணி கிராமத்தில் கலைஞரின்...