- எஸ்மோர் (கிழக்கு) கிராமம்
- பெரம்பலூர்
- கலெக்டர்
- கிரேஸ் பச்சாவ்
- எழும்பூர் (கிழக்கு)
- மாவட்ட கலெக்டர்
- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்,ஆக.12: எழுமூர்(கிழக்கு) கிராமத்தில், வரும் 14ம்தேதி மாவட்டக் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட எழுமூர் (கிழக்கு) கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்டமுகாம் வருகிற 14ஆம்தேதி புதன் கிழமை நடைபெற உள்ளது. அதற்காக பொது மக்களிட மிருந்து கோரிக்கை மனுக் களைப் பெறும்பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, எழுமூர் (கிழக்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை ச்சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக எழுமூர் (கிழக்கு) கிராம நிர்வாக அலுவலகத்தில், கோரிக்கை மனுக்களை அளிக்கு மாறு கேட்டுக் கொத்டுள்ளார்.
The post எழுமூர்(கிழக்கு) கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் appeared first on Dinakaran.