×

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அதிமுக நிவாரண உதவி

 

கூடலூர்,ஆக.12: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கூடலூர், பந்தலூர் பகுதிகளை சேர்ந்த 3 பேரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கப்பட்சி வினோத் நிவாரண உதவி வழங்கினார்.

புளியம்பாறை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி காளிதாஸ், பந்தலூர் தாலுகா சேரங்கோடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாண் குமார், சேரம்பாடி மண்ணாத்தி வயல் பகுதியைச் சேர்ந்த ஷிஹாபுதீன் பைசி ஆகிய 3 பேர் குடும்பத்திற்கும் அதிமுக மாவட்ட கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெய்சீலன் ஆகியோர் நிவாரண உதவி வழங்கினர்.

பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன், நெள்ளியாளம் நகர செயலாளர் டிஎல்எஸ் ராஜா, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் வை. சுப்பிரமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அதிமுக நிவாரண உதவி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Wayanad ,Kudalur ,district secretary ,Kappatsi Vinod ,Bandalur ,Suralmalai ,Mundakai ,Wayanad district of ,Kerala ,Puliyamparai ,Dinakaran ,
× RELATED வயநாடு நிலச்சரிவால் வழித்தடம் மாயம்:...