×

ஈரோட்டில் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி

 

ஈரோடு, ஆக. 12: ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் சாலையில் உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது வரும் 19ம் தேதி முதல் துவங்கி 30ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பயிற்சியின்போது சீருடை, உணவு இலவசமாக அளிக்கப்பட்டு, பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போர், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0424 2400338, 87783 23213, 72006 50604 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

The post ஈரோட்டில் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Erode ,Canara Bank Rural Self-Employment Training Center ,Asram ,School Campus ,Karur Road, Kollampalayam, Erode ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் பூண்டு விலை தொடர்ந்து உச்சம்