×

சென்னை கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை: அண்ணாசாலை, அண்ணாநகர், கிண்டி மற்றும் பொன்னேரி கோட்டங்களில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணாசாலை கோட்டத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை செயற்பொறியார் அலுவலகம், அண்ணாநகர் கோட்டத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் செயற்பொறியாளர் அலுவலகம், கிண்டி கோட்டத்திற்கு உட்பட்ட நங்கநல்லூர் துணை மின் நிலையம், பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட வேண்பாக்கம் துணை மின் நிலையம் ஆகிய இடங்களில் நாளை (13ம் தேதி) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மின் விநியோகம் தொடர்பான தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annasalai ,Annanagar ,Guindy ,Ponneri ,Tamil Nadu Power Distribution Corporation ,Chindathiripet ,Chennai Annasalai Division ,Annanagar Division ,
× RELATED 10 வயது சிறுமிக்கு டார்ச்சர்: 17 வயது சிறுவன் கைது