×

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கு சம்மன்: இன்று ஒரு நபர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பிரபல சாராய வியாபாரிகள் உள்பட 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ், விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கடந்த ஜூலை 3ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினார்.

கடந்த 9ம்தேதி வரை மொத்தம் 150 பேர்களிடம் விசாரணை முடிந்தது.ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த 68 பேரின் குடும்பத்தினர்களிடம் விசாரணை மேற்கொள்ள ஒருநபர் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கு கள்ளக்குறிச்சி போலீசார் மூலம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். இன்று (12ம்தேதி) முதல் விசாரணை தொடங்குகிறது. தினமும் தலா 10 பேர் வீதம் 12, 13, 16, 17ம்தேதிகளில் விசாரணை நடைபெற உள்ளதாக ஒருநபர் ஆணைய அலுவலகம் தெரிவித்துள்ளது.

உளவுத்துறை போலீஸ் இடமாற்றம்: விஷ சாராயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி உளவுத்துறை எஸ்ஐ பூங்குன்றம் சென்னை சிறப்பு காவல்படைக்கும் (பட்டாலியன்), கள்ளக்குறிச்சி உளவுத்துறை போலீஸ் சேட்டு உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கும், தியாகதுருகம் உளவுத்துறை போலீஸ் பிரபு வரஞ்சரம் காவல்நிலையத்திற்கும்பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கு சம்மன்: இன்று ஒரு நபர் ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,CBCID ,Gokuldas ,commission ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED விசாரிக்கும் போது அடித்ததற்கு...