×

வண்ணமயமான நிறைவு விழா

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது. புகழ் பெற்ற பிரான்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் நடந்த நிறைவு விழா பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. நிறைவு விழா அணிவகுப்பில் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கோல் கீப்பர் பி.ஆர்.ஜேஷ் தேசியக் கொடி ஏந்தி தலைமையேற்க இந்திய குழுவினர் உற்சாக நடை போட்டனர்.

கிராமி மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற பில்லி எய்லிஷ், கிராமி விருது பெற்ற ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் குழுவினர், தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்நூப் டாக், எச்.இ.ஆர் ஆகிய சர்வதேச கலைஞர்கள் இசை மழை பொழிந்தனர். அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளதால், அந்த நகரத்தின் பாரம்பரியம், கலைநயம், இசை, விளையாட்டுத் திறன் உள்ளிட்ட அம்சங்களை மையமாகக் கொண்டு ஹாலிவுட் தரத்திலான ‘LA28’ கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அமெரிக்க ஒலிம்பிக் சாதனையாளர்கள் ஜேக்கர் ஈட்டன், கேட் கோர்ட்னி, மைக்கேல் ஜான்சன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். ஒலிம்பிக் கொடி, லஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post வண்ணமயமான நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Colorful Closing Ceremony ,Paris Olympic competition ,France Stadium ,Manu Packer ,Closing Ceremony ,Dinakaran ,
× RELATED கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும்...