×

பிரசார இமெயில்களை ஹேக் செய்த ஈரான்: டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் டிரம்பின் பிரசாரம் குறித்த இமெயில்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று டிரம்ப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் சில வெளிநாட்டு ஏஜென்டுகளின் தலையீடு உள்ளது என்றும் ஈரான் நாட்டின் ராணுவ உளவு பிரிவில் இருந்து ஹேக்கிங் செய்யப்பட்ட இ மெயில்களில் இருந்து திருடப்பட்ட தகவல்களை அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டிரம்ப்பின் தேர்தல் பிரசார செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கூறுகையில்,‘‘டிரம்பின் பிரசாரம் தொடர்பான தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதில் ஈரானிய ஹேக்கர்களுக்கு தொடர்பு உள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.

The post பிரசார இமெயில்களை ஹேக் செய்த ஈரான்: டிரம்ப் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Iran ,Trump ,Washington ,Chancellor ,Microsoft ,Dinakaran ,
× RELATED டொனல்டு டிரம்ப் உடன் கமலா ஹாரிஸ் நேரடி...