×

கன்னியாகுமரி களைகட்டியது; கடற்கரையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் வாரவிடுமுறை நாட்களில் உள்ளூர்வாசிகளும் கடற்கரைக்கு வருவதால் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்தநிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். சுற்றிப்பார்க்க வந்தவர்கள் காலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்வதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.சில சுற்றுலா பயணிகள் பிற இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு படகில் சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் கன்னியாகுமரி கடற்கரை களைகட்டியது.

 

The post கன்னியாகுமரி களைகட்டியது; கடற்கரையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Tamil Nadu ,
× RELATED கன்னியாகுமரி மீன் சந்தைகளில் அதிகாரிகள் சோதனை..!!