×

சுதந்திர தின விழாவை முன்னிட்டு; இருசக்கர வாகன அணிவகுப்பு: காங். நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: இந்திய தேசிய காங்கிரசுக்கும், தேசிய கொடிக்கும் உள்ள உறவை பாஜக உள்ளிட்ட எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. எனவே, வருகிற 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகன அணிவகுப்பை முக்கிய வீதிகளில் நடத்த வேண்டும்.

இதை தவிர வட்டார, சர்க்கிள், நகர, பேரூர், கிராமங்களில் தேசியக் கொடியை தாங்கி பாதயாத்திரை நடத்தி விடுதலை போராட்ட வரலாற்றையும், காந்தியடிகளின் பங்களிப்பையும் விளக்குகின்ற வகையில் கூட்டங்களை நடத்த வேண்டும். இதன்மூலம் தேசியக் கொடியோடு இந்திய தேசிய காங்கிரசுக்கு இருக்கிற உரிமையையும், கொடியின் பெருமையை காக்க திருப்பூர் குமரன் போன்றவர்கள் செய்த தியாகத்தையும் மக்களிடையே பறைசாற்ற வேண்டும்.

 

The post சுதந்திர தின விழாவை முன்னிட்டு; இருசக்கர வாகன அணிவகுப்பு: காங். நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Chennai ,Tamil Nadu ,Congress ,President ,Indian National Congress ,BJP ,Dinakaran ,
× RELATED தியாகிகளின் குடும்பத்தினருக்கு...