பாரிஸ்: 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் இந்தியாவில் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என்று ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார். நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ச்சியாக 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். இந்த வெற்றியையடுத்து பல தரப்புகளிலிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதையடுத்து பாரிஸில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கம் வென்றது குறித்து தனது தாய் தெரிவித்த கருத்து, அவரது மனதில் இருந்து வந்த கருத்து என்று தெரிவித்தார். விளையாட்டு வீரர்களாக தாங்கள் நட்புடன் இருப்பதாக கூறிய நீரஜ் சோப்ரா, இருநாட்டு எல்லையில் நடப்பது வேறு விவகாரம் என்று தெரிவித்தார்.மேலும் 2036ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்த அவர், அது இந்தியாவின் விளையாட்டுத்துறைக்கு மிகவும் முன்னேற்றமடைவதாக இருக்கும் என தெரிவித்தார்.
The post 2036 ஒலிம்பிக் தொடர் இந்தியாவில் நடைபெற்றால் சிறப்பு: நீரஜ் சோப்ரா விருப்பம் appeared first on Dinakaran.