சென்னை: சென்னை ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார். சரஸ்வதி நகரில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் ஈடுபட்டனர். சாக்கடைக்குள் இறங்கி சரி செய்யும்போது ஒப்பந்த ஊழியர் கோபிநாத்துக்கு (25) மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மூச்சுத்திணறலால் மேலே ஏற முடியாமல் விஷ வாயு தாக்கி பாதாள சாக்கடைக்குள் மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த ஒப்பந்த ஊழியர் கோபிநாத், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததார்.
The post சென்னை ஆவடியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் பலி appeared first on Dinakaran.