×

பழநி அருகே பக்தர்கள் நேர்த்திக்கடன்: தலையில் தேங்காய் உடைத்து அம்மன் கோயிலில் வழிபாடு

பழநி: பழநி அருகே நடந்த கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் மகா லட்சுமியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி ஆடி 1ம் தேதி முதல் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தலையில் தேங்காய் உடைக்கும் விழா நேற்று நடந்தது. 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முன்னதாக கரகாட்டம், கதம்ப நிகழ்ச்சி, சேவையாட்டம், நாதஸ்வர இன்னிசை உள்ளிட்டவை நடந்தன. மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் அலங்கார ரதத்தில் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post பழநி அருகே பக்தர்கள் நேர்த்திக்கடன்: தலையில் தேங்காய் உடைத்து அம்மன் கோயிலில் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Palani ,Amman Temple ,Audi Month festival ,Maha Lakshmiyamman Temple ,Peryakalaiambutur ,Dindigul district ,Audi ,
× RELATED பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில்...