×

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,073 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,073 கனஅடியாக அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை முழு கொள்ளளவை நெருங்கியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,073 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri KRP Dam ,Krishnagiri ,Tenpenbane river ,Tenpenna River ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை...